ஆண்கள் ஏன் கட்டாயம் கற்றாழையை சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்!
இயற்கையில் நிறைய தாவரங்கள் நமக்கு பயன்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு தாவரம் மட்டும் எல்லாவற்றையும் விட மிகுந்த நன்மைகளை நமக்கு அள்ளித் தருகிறது. அது பயன்படாத இடமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அதன் பயன்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
அவற்றின் பயன்களை பற்றி கீழ்க்கண்டவாறு காணலாம்
- வேகம் குறைந்த உடல் மெட்டா பாலிசத்தால் கொழுப்புகள் நம் உடலிலே தங்கி விடுகிறது. சாப்பிடும் உணவுகள் சரியாக சீரணிக்காமல் போகிறது.
- ஆனால் இந்த கற்றாழை ஜெல்லில் உள்ள கால்சியம், மக்னீசியம், செலினியம் மற்றும் காப்பர் போன்ற தாதுக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.
- நீங்கள் கற்றாழை ஜூஸை பருகினால் போதும் நமது உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை எளிதாக சுத்தப்படுத்துகிறது. இதனால் நமது உடல் உறுப்புகளும் நன்றாக வேலை செய்கிறது.
- கற்றாழை கீழ்வாத நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இதிலுள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ் மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை சரி செய்கிறது. மேலும் இதுள்ள சாலிசைலிக் அமிலம் மூட்டுகளில் அழற்சி உண்டாகாமல் போரிடுகிறது.
- கற்றாழை நமது உடலுக்கு தேவையான 8 முக்கியமான அமினோ அமிலங்களை கொண்டு இருக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் கிடைத்தால் போதும் நமது உடல் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் செயல்படும்.
- நாம் சில நேரங்களில் உணவு உண்ட பிறகு அமிலத் தன்மை பிரச்சினையால் அவதிப்படுவோம். அந்த நேரங்களில் இந்த கற்றாழையை பயன்படுத்தினால் போதும் இவை வயிற்றில் அல்கலைன் தன்மையை உருவாக்கி pH அளவை சமன் செய்து விடும்.
- தற்போது செய்த ஆராய்ச்சியை ஆராய்ந்து பார்த்தால் கற்றாழை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு தூய்மையான இரத்தம் கிடைக்கிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் நமது இதயம் ஆரோக்கியமாக துடிக்க உதவுகிறது.
- கற்றாழை ஜெல்லில் உள்ள பாலிசாக்ரைடுகள் மைக்ரோபேஜஸ் அதாவது இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால் நம்மால் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும்.

0 Komentar